Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 மார்ச் 17 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா சிறிது நாட்கள் எந்தப் படங்களிலும் நடிக்காமல் ஓய்வெடுத்து வந்தார். தற்போது, ஓய்விலிருந்து திரும்பி சமூகவலைதளங்களில் புகைப்படங்கள் பகிர்வது, ரசிகர்களுடன் உரையாடுவது எனத் தன்னை பிசியாக வைத்துக்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றில் பேசிய சமந்தா, 'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற 'ஊ சொல்றியா' பாடலில் ஆடியது குறித்துப் பகிர்ந்துள்ளார் . அப்போது அவர் கூறியதாவது ,
"எனக்கு இந்தப் பாடலில் ஆடும்போது பயமாகவும் சவாலாகவும் இருந்தது. 'ஊ சொல்றியா' பாடலின் முதல் ஷாட்டை எடுக்கும்போது பயந்து நடுங்கினேன். ஏனென்றால் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பது என்பது எனக்குத் தெரிந்த விஷயம் அல்ல. அதனால் நடிகையாக ஓர் அனுபவத்தைப் பெறுவதற்காக அந்தப் பாடலில் நடித்தேன்.
தி பேமிலி மேன் 2'-ல் எப்படி நடித்தேனோ அதேபோலத்தான் புஷ்பா படத்தில் இடம்பெற்ற 'ஊ சொல்றியா' பாடலிலும் நடித்தேன். ஒரு பெண்ணாக இருப்பதால் பல இடங்களில் சிரமங்களைச் சந்தித்திருக்கிறேன்.
நான் அழகாக இல்லை, மற்ற பெண்களைப்போல இல்லை என்று நம்பிக்கை இழந்தும் சில நேரங்களில் இருந்திருக்கிறேன். அதன் பிறகு என்னைக் கடினமான சூழ்நிலைகளில் ஈடுபடுத்தி, அவற்றைக் கடக்கக் கற்றுக்கொண்டேன். அதுதான் நான் ஒரு நல்ல நடிகையாக வளர்வதற்குக் காரணம்" என தெரிவித்துள்ளார் .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago