2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

எனக்கு பயமாக இருக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கண்ணீர்

Editorial   / 2025 ஜூன் 26 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீகாந்த்தை பொருத்தவரை எந்த வித திரையுலக பின்னணியும் இல்லாமல் தமிழ் சினிமாவுக்கு வந்தவர். ஹைதராபாத்தில் பிறந்து திருப்பதியில் வளர்ந்த இவர், பின்னாளில் தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கொக்கெய்ன் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர், பொலிஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், என் மகன் என்னை பிரிந்து இருக்க மாட்டான், அவனை நினைத்து எனக்கு வருத்தமாக இருக்கிறது என நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது. போதை பொருட்களை பயன்படுத்தியது தவறுதான் என்றும் அவர் தனது தவறை உணர்ந்துள்ளார்.

ஸ்ரீகாந்தின் தந்தை எஸ்பிஐ வங்கியின் ஊழியர். மிகவும் ஆச்சாரமான பிராமண குடும்ப பின்னணி கொண்டவர். தனது மகன் சினிமாவில் நடிப்பது அவருடைய தந்தைக்கு பிடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இருந்தாலும் தனது மகனின் ஆசைக்காக அவர் இதற்கெல்லாம் ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது.

ஸ்ரீகாந்தின் குடும்பத்தினரில் பெரும்பாலானவர்கள் அரசு உத்தியோகம், வங்கி வேலை என பெரிய அளவில் இருக்கிறார்கள். அது போல் எம்சிஏ படித்த ஸ்ரீகாந்த், ஏதாவது சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றி பெரிய அளவுக்கு வர வேண்டும் என அவரது குடும்பத்தினர் நினைத்தனர்.

ஆனால் அவருடைய தோற்றம், முகம் எல்லாம் மாடலிங், சினிமாவுக்கு செட்டானது. இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ரோஜா கூட்டம் படத்தில்தான் இவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டத்தை கொடுத்தது. பெண்களும் நிறைய பேர் ரசிகர்களாகினர்.

அப்போதெல்லாம் ஸ்ரீகாந்திற்கு காதல் கடிதங்கள் குவியும் என சொல்வதுண்டு. ஆனால் அது போல் காதல் என வருவோருக்கு ஸ்ரீகாந்த் புத்திமதி சொல்லி படிப்பில் கவனம் செலுத்துமாறு அனுப்பி வைப்பாராம். இவருக்கு எம்பிஏ படித்த மனைவி வந்தனா உள்ளார்.

இவர்களுக்கு இரு பிள்ளைகள், ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இருவரும் பள்ளி படிப்பை படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் நுங்கம்பாக்கம் பாரில் நடந்த ஒரு அடிதடி தகராறில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரை பொலிஸார் கைது செய்தனர்.

 

அப்போது அவரது செல்போனை பார்த்த போது அதில் நடிகர் ஸ்ரீகாந்துடனான உரையாடல்கள் இருந்தன. அவை எல்லாம் போதை பொருள் கைமாற்றம் தொடர்பாக இருந்தது. இதையடுத்து பிரசாத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை செய்ததில் ஸ்ரீகாந்துக்கு போதை பொருள் சப்ளை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து ஸ்ரீகாந்தை பொலிஸார் சோதனை செய்தனர். அப்போது அவரது ரத்த மாதிரியில் கொக்கைனை பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

 

அவரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், "கொக்கைன் பயன்படுத்துவது சட்டப்படி தவறு என தெரியாமல் தவறு செய்துவிட்டேன். என் மகனும் மகளும் தற்போது பள்ளியில் படித்து வருகிறார்கள். நான் இப்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் வாழ்க்கையும் பாதிக்கப்படும் என அஞ்சுகிறேன்.

என் மகன் என்னை பிரிந்து இருக்க மாட்டான். அவனை நினைத்து வருத்தமாக உள்ளது என வாக்குமூலம் அளித்தார். அது போல் அவர் பிணைக்கேட்டும் கேட்டும் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கில் மேலும் பலர் சிக்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X