Editorial / 2025 ஜூன் 25 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாலிவுட்டில் தற்போதும் பட வாய்ப்புகளைப் பெற்றுவரும் நடிகையாக மனிஷா கொய்ராலா இருக்கிறார். இவர் மணிரத்னம் இயக்கிய 'பம்பாய்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து 'இந்தியன்', 'முதல்வன்', 'ஆளவந்தான்', 'பாபா', 'மும்பை எக்ஸ்பிரஸ்' போன்ற படங்களில் உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ரஜினிகாந்துடன் நடித்த 'பாபா' படம் பற்றி ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில், ''நான் பாலிவுட்டில் அதிக படங்கள் நடித்து வந்தாலும், அவ்வப்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வந்தேன். அங்கு எனக்கு ஒரு மார்க்கெட் உருவாகி இருந்தது. 'பாபா' படத்தில் நடித்த பிறகு, எனக்கு சினிமா வாய்ப்புகள் குறையும் என்று நான் கணித்தேன். பின்னாளில் அதுதான் நடந்தது. தென்னிந்திய சினிமாவில் என்னுடைய திரை வாழ்க்கைக்கு பேரழிவை உண்டாக்கிய படம் அது'' என்று கூறியுள்ளார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'ஹீரமாண்டி' என்ற பாலிவுட் வெப் தொடர், மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
54 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago