2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

எம்.ஜி.ஆர் தலைப்பில் உதயநிதி

George   / 2017 ஜனவரி 07 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் உதயநிதி நடிப்பில் எழில் இயக்கத்தில் உருவாகி வரும் 'சரவணன் இருக்க பயமேன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.

இந்நிலையில், உதயநிதி நடித்து வரும் இன்னொரு திரைப்படத்தின் தலைப்பு குறித்தத் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

'சிகரம் தொடு' இயக்குநர் கவுரவ் நாராயணன் இயக்கி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இந்த திரைப்படத்தின் 80% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

இந்நிலையில், இந்த திரைப்படத்துக்கு 'இப்படை வெல்லும்' என்ற தலைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

எம்.ஜி.ஆர் நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' என்ற பாடலை ஞாபகப்படுத்தும் வகையில் இந்த தலைப்புவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உதயநிதி, மஞ்சிமா மோகன், ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலஜி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த திரைப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கின்றார்.

இந்த திரைப்படத்தை '2.0' திரைப்படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் தயாரிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X