Editorial / 2022 ஏப்ரல் 23 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் வருகின்ற 28 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. விக்னேஷ் சிவன் மற்றும் லலித் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
படத்தின் தமிழ்நாடு திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சமந்தாவின் நண்பராக நடித்திருக்கிறார். படம் வருகின்ற 28 திகதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இந்த ட்ரெய்லரை பொறுத்தவரை, கோயில் ஒன்றில், விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா மூவரும் இணைந்து தங்களுடைய கைகளால் அணையும் தறுவாயிலிருக்கும் விளக்கை அணையாமல் தடுக்கின்றனர். அப்படியே குஷி படத்தின் காட்சியை மீட்டுருவாக்கம் செய்து படம் முழுக்க காதல், காமெடி டிராமவையொட்டி செல்லும் என்பதை உணர்த்திவிடுகிறார் விக்னேஷ்சிவன். மூன்று பேருக்கு இடையிலான காதலை மையமாக கொண்டு படம் உருவாகியிருப்பதை படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டரிலிருந்தே ரசிகர்கள் அறிந்துகொண்டனர்.
குஷி மட்டுமல்லாமல், டைட்டானிக், பாகுபலி உள்ளிட்ட படங்களில் ரெஃபரன்ஸ்களையும் வைத்து ஜாலியான ஒரு காதல் பேக்கேஜை தயார் செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன். மூன்று பேருக்கு இடையிலான காதல் ஒரு வித்தியசமான முயற்சியாகவே கருதப்படுகிறது. அதற்கு விக்னேஷ் சிவன் நியாயம் சேர்த்திருக்கிறார் என்பதை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும்.
47 minute ago
7 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
7 hours ago
17 Jan 2026
17 Jan 2026