2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஒரு பாடலுக்காக ஒரு மில்லியன் குரல்கள் பதிவு

Editorial   / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலா’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக ஒரு மில்லியன் குரல்களை பதிவு செய்ய இருப்பதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இதில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக ஒரு மில்லியன் குரல்களை பதிவு சசெய்ய இருப்பதாக சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

“ஒரு மில்லியன் குரல்களை ஒரு பாடலுக்காக பதிவு செய்ய வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. அதற்குப் பொருத்தமான வாய்ப்பு ‘காலா’ படத்தில் அமைந்துள்ளது. எல்லாத் தரப்பு மக்களின் குரல்களையும் பதிவு  செய்வது எனக்குக் கிடைத்த மிகச்சிறந்த கௌரவம். நாங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளோம். கூடுதல் தகவல்களை விரைவில் அறிவிப்போம்” என தனது ட்விட்டர் தளத்தில் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X