2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

ஒரே நாளில் 17 முறை; நடிகரின் கருத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 24 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரபல ஹொலிவூட் நடிகரும் ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் (Spider-Man: No Way Home) என்ற திரைப்படத்தின் கதாநாயகனுமான டொம் ஹொலண்ட் (Tom Holland)  அண்மையில் தெரிவித்த கருத்தானது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அண்மையில் டாம் ஹாலண்ட்  நடித்த அக்ஷன் கலந்த த்ரில்லர் திரைப்படமொன்று அண்மையில் வெளியானது. இத்திரைப்படமானது ஆங்கில மொழியில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற அக்ஷன் காட்சிகள் குறித்து மனம் திறந்த அவர் ” நான் ஒரு காரில் மோதுவது போன்ற ஒரு காட்சி இடம்பெறும். அந்த காட்சியில் மட்டும் நான் ஒரே நாளில் 17 முறை காரில் மோதிக்கொண்டேன்.

அப்போது காயம் ஏற்பட்டு கடும் வலியுடன் இந்த காட்சியில் நடித்து முடித்தேன்” என்றார். இந்நிலையில் அவர் தெரிவித்த கருத்துக்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X