Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மார்ச் 27 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளாப்போர்ட் புரொடக்ஷன் நிறுவனத்தின் நிறுவனரும் - நடிகருமான வி. சத்தியமூர்த்தி தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றுள்ளது.
அறிமுக இயக்குநர் 'எருமசாணி' புகழ் ரமேஷ் வெங்கட் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில், 'மெட்ராஸ் சென்ட்ரல்' புகழ் கோபி - சுதாகர், 'எரும சாணி' புகழ் விஜய் - ஹரிஜா, 'புட் சட்னி' புகழ் அகஸ்டின், 'டெம்பில் மங்கிஸ்' புகழ் ஷா ரா - அப்துல் மற்றும் விஜே ஆஷிக் ஆகியோர் மிக முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத் திரைப்படத்தில் பணியாற்றும் நடிகர் - நடிகைகள் முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அனைவருமே 21 வயதிற்கு கீழ் இருப்பது குறித்த திரைப்படத்தின் தனிச்சிறப்பம்சமாகும்.
இளம் கலைஞர்களின் தனித்துவமான படைப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஜோஷ்வா ஜே பெரேஸ் (அறிமுகம்), இசையமைப்பாளராக கௌஷிக் கிரிஷ் (அறிமுகம்), படத்தொகுப்பாளராக தோபிக் - கணேஷ் (அறிமுகம்) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இப்படம் குறித்து தயாரிப்பாளர் கூறுகையில் 'அறுபது நாட்களில் நிறைவு செய்ய வேண்டிய படப்பிடிப்பை வெறும் 45 நாட்களில் நிறைவு செய்து இருக்கிறார் இயக்குனர் ரமேஷ் வெங்கட். அவர் தமிழ் திரையுலகில் ஆழமாக கால் பதிப்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம். இப்படத்தில் பணியாற்றி இருக்கும் ஒவ்வொரு தொழில் நுட்ப கலைஞர்களும்இ நடிகர் - நடிகைகளும், தங்களின் முழு ஒத்துழைப்பை தந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
மேலும் 'யூடியூப்' சமூக வலைத்தளத்தில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் கலைஞர்கள் பலரை ஒரே படத்தில் ஒன்று சேர்த்து இருக்கும் பெருமை எங்களின் 'கிளாப்போர்ட்' தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடைத்திருக்கின்றது. எதிர்வரும் மே மாதம் இத் திரைப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம்' என தெரிவித்தார்.
47 minute ago
1 hours ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
23 Aug 2025