2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

காதலில் விழுந்த எமி

George   / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கிய ஐ திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த பிறகு கெத்து, தங்கமகன், விஜய்யின் 59ஆவது திரைப்படம் என தமிழில் மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார் எமிஜெக்சன். 

இதில் தனுஷ், விஜய் திரைப்படங்களில் சமந்தாவுடன் இணைந்து நடித்திருப்பவர், கெத்துவில் மட்டும் தனி ஹீரோயினியாக நடித்துள்ளார். இதற்கிடையே விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீமேக்குக்கு பிறகு மீண்டும் இந்தியில் சிங் இஸ் பிலிங் என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்து விட்டார் எமி. 

அத்திரைப்படம் வெற்றி பெற்று எமியை பொலிவூட்டில் பரவலாக பேச வைத்துள்ளதாம். அதனால், அடுத்தபடியாக இந்தியில் புதிய திரைப்படங்களை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

இந்த நேரத்தில் ஏற்கெனவே, விண்ணைத்தாண்டி வருவாயா ஹிந்தி ரீமேக்கில் நடித்தபோது அத்திரைப்பட நாயகன் ப்ரதீப் பப்பருடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய எமிஜெக்சன், அதன்பிறகு அவருடனான காதலை முறித்துக்கொண்டு, லண்டன் போய் ப்ரண்டை காதலிப்பதாக கூறிவந்தார்.

ஆனால், இப்போது பொலிவூட் சினிமாவைச்சேர்ந்த ஒருவரை அவர் காதலிப்பதாக புதிய செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால், அதுபற்றி இன்னும் ஊடகங்களிடம் எமிஜெக்சன் எந்த கருத்தும் சொல்லவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .