2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கன்னடத்து பைங்கிளியின் உடல் இன்று நல்லடக்கம்

S.Renuka   / 2025 ஜூலை 15 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் உடல் பெங்களூரு ராம்நகராவில் இன்று செவ்வாய்க்கிழமை (15) நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்டோருக்கு இணையாக சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்டிருந்த சரோஜா தேவி தனது 87 வயதில் காலமானார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள வீட்டில் சரோஜா தேவியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது மறைவுச் செய்தி அறிந்த நடிகர்-நடிகைகள், திரை மற்றும் அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் சரோஜா தேவிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

வாள் போன்ற கண்ணழகி என அனைவராலும் வர்ணிக்கப்பட்ட சரோஜா தேவி, தனது இறப்புக்கு பின்னர் கண்களை தானமாக வழங்க விரும்பினார்.

அதன்படி, பெங்களூரு நாராயணா நேத்ராலயா மருத்துவமனைக்கு சரோஜா தேவியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன.

இந்த நிலையில், கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என அனைவராலும் அழைக்கப்பட்ட சரோஜா தேவியின் உடல் தெற்கு பெங்களூரு ராம்நகராவில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. கர்நாடக அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X