J.A. George / 2021 நவம்பர் 23 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சில வாரங்களுக்கு விலகுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில் அவருக்கு பதில் அந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த 2 வாரம் கமல்ஹாசன் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், வரும் வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியைக் கமலால் தொகுத்து வழங்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வரும் வாரம் கமலுக்கு மாற்று ஏற்பாடாக ஸ்ருதிஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தெலுங்கில், நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதேபோல இடையில் ஓரிரு வாரங்கள் அவர் பிக் பாஸ் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
அப்போது அவருக்குப் பதிலாக அவரது முன்னாள் மருமகள் சமந்தா அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதற்குப் பிறகு, மீண்டும் நாகார்ஜுனா வந்து தொகுப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதே பாணியைப் பின்பற்றி, கமலின் மகளான ஸ்ருதிஹாசன் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
எனினும், நடிகர் சிம்புவும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
33 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
5 hours ago