2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கமலுக்கு வில்லனாகும் பகத்பாசில்

J.A. George   / 2020 டிசெம்பர் 09 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கமலின் விக்ரம் படத்தில் வில்லனாக பகத் பாசில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான வேலைக்காரன் படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த அவர் தற்போது கமல் நடிப்பில் உருவாக இருக்கும் விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

kamal,vikram,bhagatpasil,villain,lokesh kanagaraj ,கமல், விக்ரம், பகத்பாசில், வில்லன், லோகேஷ் கனகராஜ்

மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது -வது படமாக கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார்.

அதனைத் தொடர்ந்து தற்போது விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிக்க மாஸ்டர் படத்தை இயக்கியுள்ள அவர், தற்போது தனது 4-வது படமாக உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்துள்ள படம் விக்ரம். 

கமலின் 232 வது படமாக உருவாகும் இந்த படத்தில்தான் பகத் பாசில் வில்லனாக நடிக்கவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X