J.A. George / 2022 ஜூன் 14 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகநாயகன் கமலஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் மூன்றாம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான நிலையில் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் இந்த படத்தை கொண்டாடினர்.
தமிழ் திரையுலகினர் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகினர்களும், வட இந்திய திரையுலகினர்களும் கமல்ஹாசனுக்கும் படக்குழுவினர்களுக்கு பாராட்டுகளை குவித்தனர்.
இன்னொரு பக்கம் ‘விக்ரம்’ திரைப்படத்தின் வசூல் மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.‘விக்ரம்’ திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே 40 கோடி ரூபாய் வசூலானது. 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் ஆனது.
அதன்பின் 8 நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாயை தாண்டிய இந்தப் படத்தின் வசூல் தற்போது இரண்டு வார முடிவில் 300 கோடி ரூபாய் என்ற அளவில் வசூலை தொட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகநாயகன் கமலஹாசன் நடித்த திரைப்படம் ஒன்று 300 கோடி ரூபாய் வசூல் செய்வது இதுவே முதல் முறையாகும்.
31 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago