2025 மே 15, வியாழக்கிழமை

கரீனாவின் கர்ப்பத்தால் கோபமான அம்ரிதா

George   / 2016 ஜூலை 07 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிவூட் நடிகையான கரீனா கபூர் கர்ப்பமாக உள்ளதாக செய்தி வெளியாகியுள்ள நிலையில் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனராம்.

இந்நிலையில், கரீனாவின் கணவரின் முதல் மனைவிக்கு மட்டும்  இந்த விடயம் மகிழ்ச்சியகரமானதாக இல்லையாம். 

பொலிவூட் நடிகரான சைப் அலிகானுக்கு ஏற்கெனவே இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், சைப் அலிகான் தன் முதல் மனைவி அம்ரிதாவை விவாகரத்து செய்த பின்னர் நடிகை கரீனா கபூரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடித்து வந்த கரீனாவைப்பற்றி அவ்வப்போது அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தி வந்தது. ஆனால் இதை சைப்-கரீனா இருவருமே மறுத்து வந்தனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தன் மனைவி கரீனா, கர்ப்பமாக இருப்பதாகவும், டிசெம்பரில் குழந்தை பிறக்கும் என்று சைப் அலிகானே அறிவித்தார். கரீனா, கர்ப்பமாக இருக்கும் விடயம் அவரது குடும்பத்தாரை மட்டுமல்லாது, பொலிவூட் திரையுலகினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பல திரையுலக பிரபலங்கள் கரீனா-சைப்புக்கு வாழ்த்து தெரிவித்த வந்த வண்ணம் உள்ளனர். ஆனால், ஒருவருக்கு மட்டும் இந்த விடயம் மகிழ்ச்சிகரமாக இல்லை. அவர் தான் சைப்பின் முதல் மனைவி அம்ரிதா சிங்.

கரீனா, கர்ப்பமாக இருக்கும் செய்தி குறித்து அம்ரிதாவிடம் ஒருவர் அலைபேசி ஊடாக கேட்க, அவர் சற்றே கோபமாகிவிட்டாராம். 'உங்களுக்கு எவ்வளவு தைரியம், என்னிடம் இந்த கேள்வியை கேட்பீர்கள், நீங்கள் யார்?, இனிமேல் இதைப்பற்றி என்னிடம் எதுவும் பேச வேண்டாம்' என்று கோபமாக கூறிவிட்டாராம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .