2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கலையரசனுக்கு ஜோடியான பிச்சைக்காரன் நாயகி

George   / 2016 மார்ச் 02 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய் அன்டனியின் பிச்சைக்காரன் திரைப்படத்தில் நடித்துள்ள  நடிகை சாதனா டைட்டஸ், மெட்ராஸ் கலையரசன் நடிக்கும் எய்தவன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

குரு சுக்ரன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான சாதனா டைட்டஸ், அந்தத் திரைப்படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் அடுத்தபடியாக சரியான திரைப்படவாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார்.

இந்தநிலையில், விஜய் அன்டனி நடிப்பில் வருகிற வெள்ளிக்கிழமை(04) திரைக்கு வரவிருக்கும் பிச்சைக்காரன் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியானதில் இருந்தே கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார் சாதனா டைட்டஸ்.

அதையடுத்து சில இயக்குநர்கள் அவரிடம் கதை சொல்லி வந்தனர். இதில் இரண்டு கதைகளை ஓகே செய்திருக்கும் சாதனா டைட்டஸ், தற்போது மெட்ராஸ் கலையரசன் நடிக்கும் எய்தவன் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

மதயானைக்கூடடம் திரைப்படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரின் உதவியாளர் சக்தி இயக்கும் இந்தத் திரைப்படத்தில் சாதனா டைட்டஸ் பொலிஸ் வேடத்தில் நடிக்கிறாராம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X