2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கலவையாக கார்த்திக்

Editorial   / 2017 ஜூலை 31 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாஜி ஹீரோ கார்த்திக், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அநேகன் திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். அந்தத் திரைப்படத்தில், அவரது நடிப்பு மிகப் பெரியளவில் பேசப்பட்டதால், அதையடுத்து அவர் பல வருடங்களுக்கு முன்பு நடித்திருந்த, அமரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாரானார் இயக்குநர் ராஜேஷ்வர்.

ஆனால் அந்தத் திரைப்படம், பின்னர் ஆரம்பிக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது விக்னேஷ்சிவன் இயக்கத்தில், சூர்யா நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில், மீண்டும் வில்லனாக நடித்திருக்கிறார் கார்த்திக். மேலும், இந்தத் திரைப்படத்தில், வழக்கமான வில்லனாக இல்லாமல் மாறுபட்ட வில்லனாக நடித்திருக்கிறாராம் கார்த்திக். அவருக்கென்று இன்னும் ரசிகர்கள் இருப்பதால், அவரை பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டும் கலந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறாராம் விக்னேஷ்சிவன். அந்தவகையில், இந்தத் திரைப்படத்தில் வில்லன் கார்த்திக்குக்கும் திரையரங்குகளில் கைத்தட்டல்கள் கிடைக்கும் என்பது உறுதியே.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X