Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 20 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக மிகவும் பரபரப்பாக போய்க் கொண்டிருப்பது, வனிதா விஜயகுமார், கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரது சண்டை.
வனிதா விஜயகுமார் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட பின் நடந்த சில யு-டியூப் சேனல் விவாதங்களில் வனிதாவின் திருமணத்தைப் பற்றி கஸ்தூரியும், லட்சுமியும் சொன்ன கருத்துக்கள் வனிதாவை மிகவும் கோபப்படுத்தியுள்ளது.
“கஸ்தூரி, லட்சுமி உங்கள் இருவருக்கும் கடைசி எச்சரிக்கை. நீங்கள் இருவரும் சரியானவர்கள் என்று நினைத்துக் கொண்டு எனது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டீர்கள் என்றால், உங்களது அந்த சரியான வாழ்க்கையை ஆதாரத்துடன் இந்த சமுதாயத்தின் முன் வெளிப்படுத்துவேன்,” என்று டுவிட்டரில் எச்சரிக்கை விடுத்தார்.
அதைத் தொடர்ந்து வனிதா, கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு இடையே தற்போது டுவிட்டரில் மோசமான வார்த்தைகளுடன் கடுமையான சண்டை நடந்து வருகிறது.
“எனது வாழ்க்கையிலும், டுவிட்டரிலும் கொமெடியான முட்டாள் கஸ்தூரியை பிளாக் செய்கிறேன். அவர் வழக்கம் போல உளறிக் கொண்டிருக்கட்டும். அவர் அதற்குத்தான் தகுதியானவர், காமெடி பீஸ்”, என்றும் வனிதா டுவீட் செய்துள்ளார்.
வனிதாவின் டுவீட்டுகளுக்குத் தொடர்ந்து கஸ்தூரியும், லட்சுமியும் கடுமையான பதிலடியைக் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago