2025 மே 06, செவ்வாய்க்கிழமை

காஜலின் அதிரடி

J.A. George   / 2020 டிசெம்பர் 24 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை காஜல் அகர்வால் கடந்த ஒக்டோபர் இறுதியில் கௌதம் கிட்ச்லுவை திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் தேனிலவுக்காக மாலைத்தீவு சென்றனர்.

தேனிலவு முடிந்த நிலையில் இந்தியா திரும்பிய காஜல் நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அடுத்து கைவசம் இந்தியன் 2 திரைப்படம் உள்ளது. 

ஆனால் முன்புபோல் வாய்ப்பு வருமா என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டுள்ளதால் தனது கவனத்தை வியாபாரம் பக்கம் திருப்பி இருக்கிறார். 

ஏற்கெனவே குடும்ப வியாபாரமான நகை வியாபாரத்தில் பங்குதாரராக இருக்கிறார். தவிரச் அண்மையில் வீடியோ கேம்ஸ் கம்பெனியில் பங்குகள் வாங்கி உள்ளார்.  தற்போது கணவரின் கம்பெனியில் பங்குதாரராகி இருக்கிறார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X