2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

காதலியை கரம்பிடித்தார் நடிகர் கவின்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 20 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

'சரவணன் மீனாட்சி' சீரியலில் நடித்து பிரபலமான நடிகர் கவின் 'நட்புன்னா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார்.

இதன் பின்னர் வெளியான 'லிஃப்ட்', 'டாடா' போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இவர் தற்போது நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்நிலையில், நடிகர் கவின் தனது நீண்ட நாள் தோழியான மோனிகா என்பவரை திருமணம் செய்யப் போவதாகவும் இவர்களது திருமணம் ஓகஸ்ட் 20ஆம் திகதி நடைபெறும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இன்று அவர்களது திருமணம் நடந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X