Freelancer / 2026 ஏப்ரல் 06 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
திரை உலகில் 22 ஆண்டுகளைக் கடந்தும் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா, காதல் குறித்துப் பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயினாகத் திகழும் த்ரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எப்போதும் இணையத்தில் பேச்சுகள் எழுவதுண்டு. 42 வயதாகும் த்ரிஷா, தற்போது 'விடாமுயற்சி', 'தக் லைஃப்' எனப் பல பெரிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் தமிழக அரசியல் பிரமுகர் ஒருவர் த்ரிஷா குறித்துப் பேசியது பெரும் கண்டனத்திற்கு உள்ளானது. அதேபோல், நடிகர் விஜய்யுடன் அவர் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்களும் வைரலாகின. மேலும், தனது வளர்ப்பு நாயைக் கோயிலுக்கு அழைத்துச் சென்ற விவகாரத்திலும் த்ரிஷா விமர்சனங்களைச் சந்தித்தார்.
இத்தகைய சூழலில், த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் காதல் பற்றி ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.
அதில், "காதல் மட்டுமே எல்லாம் அல்ல; ஆனால், காதல் இல்லாமல் அனைத்தும் அர்த்தமற்றது" (Love isn't everything, but without love, everything is nothing) எனக் குறிப்பிட்டுள்ளார்.
த்ரிஷாவைச் சுற்றிப் பல்வேறு கிசுகிசுக்கள் எழுந்து வரும் நிலையில், அவர் திடீரென காதல் குறித்துப் பதிவிட்டிருப்பது, அவர் யாரையாவது காதலிக்கிறாரா அல்லது அவரது வாழ்வில் காதல் மலர்ந்துள்ளதா என்ற கேள்விகளை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
14 minute ago
23 minute ago
29 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
29 minute ago
40 minute ago