J.A. George / 2022 மார்ச் 15 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்புவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்க ஆவலுடன் இருப்பதாக நடிகை தமன்னா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான அஜீத், விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால், உதயநிதி என பல நடிகர்களுடன் தமன்னா நடித்துள்ளார்.
ஆனால் சிம்புவுடன் அவர் நடித்த ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற திரைப்படம் படுதோல்வி அடைந்தது மட்டுமன்றி சிம்பு மற்றும் தமன்னா ஆகியோருக்கு இடையில் பொருத்தமும் இருக்கவில்லை.
இந்த நிலையில் இதுகுறித்து அண்மையில் அளித்த பேட்டியில் தமன்னா கூறியபோது, “சிம்புவுடன் நடித்த ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற திரைப்படத்தில் மட்டும் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகவில்லை. எனவே மீண்டும் ஒருமுறை சிம்புவுடன் நடிக்க காத்திருக்கிறேன்”என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து சிம்பு, தமன்னா நடிக்கும் திரைப்படம் உருவாகுமா? என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
46 minute ago
7 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
7 hours ago
17 Jan 2026
17 Jan 2026