Editorial / 2017 நவம்பர் 06 , பி.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த திரைப்படம் வனமகன். இந்தத் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஹிந்தி நடிகை சாயிஷா. அதன்பிறகு பிரபுதேவா இயக்கத்தில் விஷால்-கார்த்தி இணைந்து நடிக்கயிருந்த கறுப்பு ராஜா வெள்ளை ராஜா திரைப்படத்தில் கமிட்டாகியிருந்தார் சாயிஷா. ஆனால் அந்தத் திரைப்படம் இதுவரை தொடங்கப்படவில்லை. தற்போது பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் திரைப்படத்தில் சாயிஷா நடிக்கவிருப்பதாக ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது. ஆக, கறுப்பு ராஜா வெள்ளை ராஜாவில் கார்த்தியுடன் டூயட் பாடயிருந்த சாயிஷா, அது நடைபெறாத நிலையில், இப்போது பாண்டிராஜ் திரைப்படத்தில் கார்த்தியுடன் இணையப்போகிறார்.
1 hours ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
19 Nov 2025