Editorial / 2018 மே 30 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
'காவிரி விடயத்தில், கர்நாடகாவுக்கு எதிராக நடிகர் ரஜினி பேசியிருப்பதால், அவர் நடித்துள்ள, 'காலா' திரைப்படத்தை, கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோமென, கன்னட திரைப்பட வர்த்தகச் சபையின் தலைவர் சா.ரா.கோவிந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினி நடித்துள்ள காலா திரைப்படம், எதிர்வரும் ஜூன் 7ஆம் திகதியன்று வெளியிடப்படவுள்ளது. இப்படத்தை, கர்நாடகத்தில் திரையிட்டால், மிகப்பெரிய போராட்டம் நடத்துவோமென்று, வாட்டாள் நாகராஜ் கூறியிருந்தார். மேலும் சில அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், 'காலா' திரைப்படத்தை, கர்நாடகத்தில் திரையிடுவது தொடர்பாக, கன்னட திரைப்பட வர்த்தகச் சபை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. காவிரி நதி நீர் விடயம் தொடர்பாக, நடிகர் ரஜினி, கர்நாடகாவுக்கு எதிராகப் பேசியுள்ளார். இதனால், காலா திரைப்படத்தை வெளியிட்டால், மக்கள் மத்தியில் பிரச்சினை எழுமென்று, கூட்டத்தில் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
இறுதியில், கன்னட திரைப்பட வர்த்தகச் சபையின் தலைவர் சா.ரா.கோவிந்த், கூறுகையில், ''காவிரி விடயம் தொடர்பாக, கர்நாடகாவுக்கு எதிராக, ரஜினி பேசியிருப்பது தவறு. அவர் மன்னிப்புக் கேட்டாலும், 'காலா' திரைப்படத்தைத் திரையிடமாட்டோம்'' என்றார்.
கர்நாடகாவில், ரஜினிக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பலரும் எதிர்பார்த்திருந்த 'காலா' திரைப்படம் திரையிடுவதற்கு, கன்னட திரைப்பட வர்த்தகச் சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

9 hours ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
19 Nov 2025