Editorial / 2021 நவம்பர் 22 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

அதர்வா நடித்துள்ள இரு படங்கள் டிசெம்பரில் திரைக்கு வருகின்றன. தள்ளிப்போகாதே மற்றும் குருதி ஆட்டம். இதில் குருதி ஆட்டம் திரைப்படம் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24ஆம் திகதி வெளியாகிறது.
தீபாவளி, பொங்கலைப் போன்று கிறிஸ்மஸ் தமிழகத்தின் பெருவிழா அல்ல. கிறிஸ்மஸை முன்னிட்டு முன்னணி நடிகர்களின் படங்ககள் பொதுவாக வெளியாவதில்லை.
அதேநேரம், பிற நடிகர்களின் ஒன்றிரண்டு படங்களாவது கிறிஸ்மஸை முன்னிட்டு வெளியாகும். கிறிஸ்மஸை தொடர்ந்து வரும் விடுமுறையையும், புத்தாண்டு விடுமுறையையும் கணக்கில் கொண்டு டிசெம்பர் இறுதியில் படத்தை வெளியிடுவார்கள்.

பொங்கலுக்கு பெரிய படங்களுடன் போட்டியிட விரும்பாதவர்களின் பாதுகாப்பான கிரவுண்ட் கிறிஸ்மஸ் வெளியீடு.
முதல் படம் பாணா காத்தாடி, பாலாவின் பரதேசி, இமைக்கா நொடிகள் என சில வெற்றிகளை தவிர அதர்வாவின் பிற படங்கள் லாபம் தந்ததில்லை. ஒரு வெற்றி கண்டிப்பாக தேவைப்படும் நிலையில் டிசம்பரில் இரு படங்கள் அவரது நடிப்பில் வெளியாகின்றன.
டிசம்பர் 3 வெளியாகும் தள்ளிப் போகாதே திரைப்படம் தெலுங்கில் வெற்றி பெற்ற நின்னுக்கோரி படத்தின் தமிழ் தழுவல். ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார்.

அனுபாமா பரமேஸ்வரன் நாயகி. காதல் திரைப்படம். டிசம்பர் 24 வெளியாகும் குருதி ஆட்டம் ஆக்ஷன் திரைப்படம். 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷின் இரண்டாவது படம். முதுகில் ஏராளம் கத்தியுடன் கத்தி ஸ்டேன்ட் போல் அதர்வா நிற்கும் புகைப்படம் பயமுறுத்தினாலும், 8 தோட்டாக்களை இயக்கியவரின் படம் என்பதால் குருதி ஆட்டம் ஓடும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை குருதி ஆட்டம் தொடங்கி வைத்திருக்கிறது. பொங்கலுக்கு வலிமையுடன் போட்டியிட விரும்பாத படங்கள் விரைவில் தங்களின் கிறிஸ்மஸ் வெளியீட்டை அறிவிக்கலாம்.

16 minute ago
32 minute ago
36 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
32 minute ago
36 minute ago
42 minute ago