Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2025 ஜூன் 22 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
குபேரா படத்தின் முதல்நாள் வசூல் குறித்து படக்குழு கூறியது ரசிகர்களிடையே குழப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படத்தின் முதல்நாள் வசூல் இந்திய அளவில் ரூ.13 கோடி என தகவல் வெளியாகிய நிலையில், படக்குழு உலகம் முழுவதும் ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறியுள்ளது.
ஆனால், அந்தப் போஸ்டரில் வசூல் விவரத்துக்கு அடுத்தாக மதிப்பிடப்பட்டது எனக் கூறியுள்ளது.
படக்குழுவே இப்படி தோராயமாக வசூல் விவரத்தை அளித்தால் நாங்கள் எதைத்தான் நம்புவது என தனுஷ் ரசிகர்கள் விமர்சனத்தை முன்வைக்கிறார்கள்.
கடைசியாக வெளியான தனுஷின் ராயன் படத்தினை விட குபேரா குறைவாக வசூலித்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் முதல்நாளில் ரூ.15. 7 கோடி வசூலித்திருந்தது.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் உடன் நாகார்ஜுனா, ரஷ்மிகா நடிப்பில் குபேரா திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 20 அன்று வெளியானது.
தணிக்கைச் சான்றிதழுக்குப் பிறகு 19 காட்சிகள் நீக்கப்பட்டன. சுமார் 13 நிமிஷம் 41 நொடிகள் நீங்கி கடைசியில் 3 மணிநேரம் 1 நிமிஷம் கொண்டதாக வெளியானது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago