2025 நவம்பர் 05, புதன்கிழமை

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா..

Freelancer   / 2022 ஜூன் 04 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தோன்றும் நிகழ்ச்சி நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பப்படுவதாக கூறப்படுகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகிய இருவரும் ஜுன் 9ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளனர். 

மகாபலிபுரம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும், இந்த திருமணத்திற்கு கோலிவுட் திரை உலகின் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தை வீடியோ படமாக எடுத்து அதை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்ய விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்த நிலையில்,  இந்த திருமண வீடியோவை இயக்கப்போவது கௌதம் மேனன் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X