2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இயக்குநர்

J.A. George   / 2022 ஜனவரி 31 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் அதிகளவானவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். அது மட்டுமின்றி திரையுலகினர் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அண்மையில், கமல்ஹாசன், த்ரிஷா, வடிவேலு உள்பட ஒருசிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின்னர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

இந்த நிலையில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து பாரதிராஜா விரைவில் குணமாக வேண்டும் என அவருக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X