2025 மே 05, திங்கட்கிழமை

’கோலமாவு கோகிலா’ இந்தி ரீமேக் ரிலீஸ் திகதி எப்போது?

Freelancer   / 2022 ஜூன் 18 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கோலமாவு கோகிலா' படத்தின் ஹிந்தி ரீமேக் ரிலீஸ் குறித்த தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான 'கோலமாவு கோகிலா' என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை ஹிந்தியில் தயாரிக்க முடிவு செய்து கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நடைபெற்றது.

தயாரிப்பாளர் போனி கபூர் - ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ஜான்வி கபூர் இந்த படத்தில் நயன்தாராவின் கேரக்டரில் நடித்து இருந்தார் என்பதும், இந்த படத்தை லைக்கா நிறுவனமே தயாரித்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் வரும் ஜூலை 29 ஆம் திகதி ஹாட் ஸ்டார் ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படம் திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில்,  தற்போது ஓடிடியில் நேரடியாக ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X