2025 மே 06, செவ்வாய்க்கிழமை

க்ளைமாக்ஸை நெருங்கிய கேஜிஎஃப்

J.A. George   / 2020 டிசெம்பர் 08 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் கேஜிஎஃப் சேப்டர் 2.

கன்னட திரைப்படமான கேஜிஎஃப் முதல் பாகம் இந்திய அளவில் பெரிய வெற்றி பெற்றது. வசூலிலும் ராக்கி பாய் மிரட்டினார்.

புது அப்டேட் என்னவென்றால், படக்குழுவினர் கேஜிஎஃப் 2-க்கான க்ளைமாக்ஸ் காட்சிகளை உருவாக்கி வருகின்றனர். 

படத்துக்கு சண்டைக்காட்சி இயக்குநராக தேசிய விருது வென்ற அன்பறிவ் இரட்டையர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

மிரட்டலான சண்டைக் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. படத்தின் பெரிய எதிர்பார்ப்பே வில்லனாக அதிரா கேரக்டரில் வரும் சஞ்சய் தத் ரோல்தான். 

கூடுதலாக, இந்த க்ளைமாக்ஸ் ஷூட்டில் சஞ்சய் தத் & யஷ் இருவருக்குமான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுவருவதாகவும் சொல்லப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X