2025 மே 21, புதன்கிழமை

சாவித்ரியாக வித்யாபாலன்

George   / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதை, தெலுங்கில் “மகாநதி” என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது.

திரையுலகில் சாவித்ரி முத்திரை பதித்தது தொடங்கி அவரது இறுதி காலத்தில் நடந்த முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை கதைக்களமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்தில் சாவித்ரி வேடத்தில் சமந்தா நடிப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

ஆனால், இப்போது “மகாநதி” தெலுங்கு திரைப்படத்தில் சாவித்ரி வேடத்தில் சமந்தா நடிக்கவில்லை என்று உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த படத்தில் சமந்தாவும் ஒரு முக்கியமான வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

அப்படியென்றால் சாவித்ரி வேடத்தில் நடிப்பது யார்? என்று விசாரித்தபோது, இந்திய அளவில் பிரபலமான ஒரு நடிகை அந்த வேடத்தில் நடித்தால் தான் திரைப்படத்தை இந்திய அளவில் வெளியிட முடியும் என்பதால், ஹிந்தி நடிகை வித்யாபாலனிடம் அந்த வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

இதற்கு முன்பு, கவர்ச்சி நடிகை சில்க்ஸ்மிதா வாழ்க்கை வரலாறு கதையில் உருவான “தி டர்ட்டி பிக்சர்ஸ்” திரைப்படத்தில் வித்யாபாலன் தான் சில்க்காக நடித்திருந்தார். அந்த வேடத்தில் நடித்தமைக்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

அதனால், இந்த திரைப்படத்தில் சாவித்ரியாக அவர் நடித்தால் திரைப்படத்துக்கு பெரிய அளவில் அங்கிகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X