2025 மே 09, வெள்ளிக்கிழமை

சங்கரைப் பாராட்டினார் ரஜினி

Editorial   / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வௌிவரவுள்ள திரைப்படம் ‘2.0’. பிரமாண்ட பொருட்செலவில், சங்கர் இயக்கத்தில் தற்போது உருவாகி வருகிறது. பிரபல ஹிந்தி நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடிக்கிறார். 3டி தொழில்நுட்பத்தில் தயாரிப்படும் இப்படத்தின் உருவாக்க காட்சிகள் வௌியிடப்பட்டுள்ளன.. இதன்போது ரஜினி, சிறப்பு கண்ணாடியை அணிந்து, தான் நடித்த காட்சிகளை பார்த்து இரசித்தார்.

இது குறித்து ரஜினி கூறுகையில், ”இயக்குநர் சங்கர் 3டி-யை மனதில் வைத்துதான் இந்தக் கதையை எழுதி இருக்கிறார். படத்தில் நான் வரும் 3டி காட்சிகளைப் பார்த்து மெய்மறந்து போனேன். அது ஒரு பிரமாண்ட அனுபவம். இதற்காக ‌சங்கரைப் பாராட்டுகிறேன்.

எந்த ஒரு ஹாலிவுட்டின் 3டி படத்துக்கும் இந்த படம் சளைத்தது அல்ல. இந்த 3டி படத்தை பார்க்கும் மக்களின் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவலுடன் உள்ளேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X