Editorial / 2020 டிசெம்பர் 06 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பொஸ் வீட்டிலிருந்து இன்று சனம் வெளியேறுகிறார் என பலரும் கூறிவரும் நிலையில், இன்றைய முதல் ப்ரொமோ வீடியோவில் இறுதியாக இருக்கும் சனம், அனிதா, ஷிவானி ஆகியோரில் யார் காப்பாற்றப்பட வேண்டும் என கமல் அனைத்து போட்டியாளர்களிடமும் கேட்கிறார்.
. அதற்கு பலரும் சனம் ஷெட்டியின் பெயரை தான் தெரிவித்து இருக்கிறார்கள். நேற்றைய எபிசோடில் சனம் ஷெட்டிக்கு ஆதரவாக கமல் அதிகம் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிஷா, ரியோ உள்ளிட்டவர்கள் சனம் காப்பாற்றப்பட வேண்டும் என கூறிய நிலையில், ஆரி மட்டும் அனிதா வெளியே போய்விடுவார் என கூறிவிட்டார்.
அதை கேட்டு மற்றவர்கள் சற்று ஷாக் ஆகிவிட்டார்கள். கமல் கேட்ட கேள்வியை விட்டுவிட்டு இவர் எலிமினேஷனை பற்றி பேசுகிறாரே என யோசித்தார்கள். அதன் பின் சனம் காப்பாற்றப்பட வேண்டும் என்று ஆரி தெரிவித்தார்.
எனவே, சனம் ஷெட்டி காப்பாற்றப்படுவரா அல்லது வெளியேறுவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
12 minute ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
8 hours ago