Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 நவம்பர் 14 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து வெளியே சென்ற பிறகு தர்ஷனுக்கும், அவரின் காதலியான நடிகை சனம் ஷெட்டிக்கும் இடையே என்ன பிரச்சினை ஏற்பட்டது என்று தெரியவில்லை, பிரிந்துவிட்டார்கள்.
காதல் முறிந்துவிட்டதை சனம் ஷெட்டி இன்ஸ்டாகிராமில் சூசமாக தெரிவித்திருந்தார். ஷெரின் பிக்கப் ஆனதால் தர்ஷன் சனம் ஷெட்டியை டிராப் செய்துவிட்டார் என்று சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. ஒரு 100 நாள் கூத்தால் சனம் ஷெட்டியின் வாழ்க்கை இப்படி மாறிவிட்டதே என்று அவரின் ரசிகர்கள் பாவப்பட்டுள்ளனர்.
காதல் விவகாரம் தொடர்பாக தர்ஷன் இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. இந்தநிலையில் தர்ஷன் தனது ஸ்டைலான புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு கூறியிருப்பதாவது, உங்கள் இதயம் சொல்வதை கேளுங்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை கண்டுகொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
தர்ஷனின் ட்வீட்டை பார்த்தவர்கள் அவர் சனம் ஷெட்டிக்காக தான் இப்படி தெரிவித்துள்ளார். சனம் தன்னை பற்றி கூறுவது தனக்கு பெரிதாகத் தெரியவில்லை என்பதை ட்வீட் மூலமாக கூறியுள்ளார் என்கிறார்கள்.
நான் சனம் ஷெட்டியை காதலிக்கிறேன் என்று தர்ஷன் எப்பொழுதுமே வெளிப்படையாக கூறவில்லை. அதனால் தான் தர்ஷன் பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து வந்த பிறகு அவரிடமே கேளுங்கள் என்று சனம் தெரிவித்தார்.
இந்தநிலையில் சனமுடனான காதல் முறிந்துவிட்டது என்பதையும் தர்ஷன் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை. அதே போன்று தனக்கு ஷெரின் மீது காதல் வந்துவிட்டதாகவும் அவர் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
41 minute ago