2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சனம்ஷெட்டி நெகிழ்ச்சி

J.A. George   / 2020 டிசெம்பர் 07 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று சனம்ஷெட்டி வெளியேற்றப்பட்டதை பல பிக்பாஸ் ரசிகர்கள் இன்னும் ஜீரணிக்க முடியாமல் உள்ளனர். 

அவர் அளவுக்கு எந்த ஒரு கருத்தையும் தைரியமாக கூறியவர் பிக்பாஸ் வீட்டில் வேறு யாரும் இல்லை என்றும் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு நல்ல போட்டியாளரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை எப்படி நடத்தப் போகிறார்கள்? என்ற கேள்வியையும் பார்வையாளர்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் சனம்ஷெட்டியின் வெளியேற்றம் குறித்து கூறிய நெட்டிசன் ஒருவர், "பாசிட்டிவ் எண்ணத்தோடு வந்து மக்களின் மனதை வெற்றி பெறுவது என்பது கஷ்டம் இல்லை. ஆனால் நெகட்டிவ் சாயலுடன் வந்து பாசிட்டிவ் ஆக மாறி மக்கள் மனதில் இடம் பிடிப்பது என்பது ஒரு தனி கெத்து" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சனம் நெகிழ்ச்சியுடன் கூறியபோது "இதைவிட வேறு என்ன எனக்கு வேண்டும்? என்னை ஆதரித்த, அன்பு செலுத்திய அனைவருக்கும் நன்றி" என்று பதிவு செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X