Editorial / 2023 ஜனவரி 06 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமந்தா, தொடர்ந்து பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி, நடுநிசி நாய்கள், நான் ஈ, நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான், கத்தி. 10 எண்றதுக்குள்ள, தங்க மகன், தெறி, 24, மெர்சல், இரும்புத்திரை, சீமராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தார்.
தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தெலுங்கில் சமந்தா நடிப்பில் சமீபத்தில் யசோதா படம் வெளியானது. தற்போது ஷகுந்தலம், குஷி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஆரத்யா என்ற பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார் சமந்தா.

நடிகை சமந்தா விமான நிலையத்தில் நடந்து வரும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் கலங்கியுள்ளனர்.
இந்நிலையில் அரிய வகை தசை அழற்சி நோயான மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் சமந்தா.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .