J.A. George / 2022 பெப்ரவரி 23 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
விஜய் டிவிக்கு பதிலாக இந்த நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி போட்டியாளர்களில் ஒருவராக வனிதா விஜயகுமார் பங்கேற்றுள்ளார். ஆரம்பம் முதலே இவருக்கு சக போட்டியாளர் களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது.
சில தினங்களுக்கு முன்னர் நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறேன் என கதறி அழுதார். அதன் பின்னர் அவருக்கு பிக்பாஸ் ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் பிக்பாஸ் இடம் தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற விரும்புவதாகவும் இனி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதனால் வனிதாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
48 minute ago
7 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
7 hours ago
17 Jan 2026
17 Jan 2026