2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி

J.A. George   / 2021 ஒக்டோபர் 26 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது தமிழில் ரஜினியுடன் ‘அண்ணாத்த, செல்வராகவனுடன் ‘சாணிக்காயிதம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இதுதவிர மலையாளத்தில் மோகன்லால் உடன் ‘அரபிக்கடலின் சிங்கம்’, தெலுங்கில் மகேஷ்பாபு உடன் ‘சர்காரு வாரி பாட்டா’, சிரஞ்சீவியுடன் ‘போலா சங்கர், நானிக்கு ஜோடியாக ‘தசரா’ போன்ற திரைப்படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருவதால், நடிகை கீர்த்தி சுரேஷ், சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

நானி ஜோடியாக தசரா திரைப்படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் அதிக சம்பளம் கேட்டதாகவும், இறுதியில் ரூ.3 கோடிக்கு உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X