George / 2017 ஜனவரி 22 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

சல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும். அதுவரை இந்த இடத்தைவிட்டு இம்மியளவும் நகரமாட்டோம் என்று நடிகர் லோரன்ஸ் கூறியுள்ளார்.
சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் சல்லிக்கட்டுப் பிரச்சினை குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் லோரன்ஸ், சனிக்கிழமை உணர்வுபூர்வமாகப் பேசியதாவது,
“இந்தக் கூட்டத்துக்குத் தலைவனே இல்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள். இந்தக் கூட்டத்தின் தலைவன், தமிழ். அதுதான் நம்மை இங்கு இணைத்துள்ளது.
தர்மம் இல்லாமல் எதுவும் ஜெயிக்காது. நியாயம் இல்லாமலும் ஜெயிக்காது. இது தர்மமும் நியாயமும் கொண்ட போராட்டம். நாம் 5 வயதுவரை தாய்ப்பால் குடிக்கிறோம். ஆனால் சாகும்வரைக்கும் மாட்டுப்பால் குடிக்கிறோம். மாடு என்பது தாய், என் தாய்கூட விளையாடகூடாது என்று சொல்வதற்கு நீ யார் பீட்டா.
யார் பிச்சை கேட்டாலும் தாயே பிச்சை போடு என்றுதான் கேட்பான். அந்தளவுக்கு தாய் மதிப்பு கொண்டவர். எங்கள் தாய் மீது கை வைத்தால் சும்மா இருப்போமா? சல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும். அதுவரை இந்த இடத்தைவிட்டு இம்மியளவும் நகரமாட்டோம்.
எங்கெல்லாம் தமிழனுக்குப் பிரச்சினை வந்ததோ அது அத்தனையையும் எதிர்க்கும் விதமாக மொத்தமாக சேர்ந்த கூட்டம் இது” என்றார்.
16 minute ago
22 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
24 minute ago