R.Tharaniya / 2025 நவம்பர் 20 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரவுடி அண்ட் கோ. படத்தில் கதாநாயகனாக சித்தார்த் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். மேலும் சுனில், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிராங்ஸ்டர் ராகுல் உள்பட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உணவு டெலிவரி சேவை போல மக்களின் பிரச்சினைகளை கையாளும் கார்ப்பரேட் ரவுடி உலகத்திற்கு ரசிகர்களை இந்த படம் அழைத்து செல்கிறது. நகைச்சுவை நிறைந்த காதல் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் படம் திரைக்கு வருகிறது. இதை தொடர்ந்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
படத்தின் தலைப்பு குறித்து இயக்குநர் கார்த்திக் ஜி.கிரிஷ் கூறுகையில், ‘ரவுடிகளின் கார்ப்பரேட் சாம்ராஜ்யம் பற்றிய கதை என்பதால் ‘ரவுடி அண்ட் கோ’ என்பதை தலைப்பாக தேர்வு செய்தோம். முழுக்க முழுக்க நகைச்சுவை நிறைந்த எண்டர்டெயினராக கதை இருக்கும்’ என கூறினார்.
27 minute ago
2 hours ago
4 hours ago
30 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago
4 hours ago
30 Jan 2026