2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

சின்னத்திரை நடிகர் ரிதுராஜ் காலமானார்

Mayu   / 2024 பெப்ரவரி 20 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல சின்னத்திரை நடிகர் ரிதுராஜ் சிங் 59 வயதில் மாரடைப்பால் காலமானார்.

அவரது மரணத்தை அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான அமித் பெஹல் உறுதிப்படுத்தியுள்ளார். இவரது மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.திங்கள்கிழமை இரவு ரிதுராஜ் உயிரிழந்தார். கணைய நோயால் பாதிக்கப்பட்ட அவர் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கணைய சிகிச்சைக்காக சில காலத்திற்கு முன்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், வீடு திரும்பினார், இந்நிலையில், மாரடைப்பால் அவர் காலமானார்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகர் அர்ஷத் வார்சி தனது ட்விட்டர் பக்கத்தில், "ரிது ராஜ் காலமானார் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். நாங்கள் ஒரே கட்டிடத்தில் வசித்து வந்தோம், அவர் ஒரு தயாரிப்பாளராக எனது முதல் படத்தின் ஒரு பகுதியாக இருந்தார். நண்பரை, சிறந்த நடிகரை இழந்து தவிக்கிறேன். உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்" என குறிப்பிட்டுள்ளார்.

ரிதுராஜ் சிங்கின் முழுப்பெயர் ரிதுராஜ் சிங் சந்திராவத் சிசோடியா. அவர் ராஜஸ்தானின் கோட்டாவில் சிசோடியா ராஜ்புத் குடும்பத்தில் பிறந்தார். ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டாலும், சொந்த மாநிலத்தில் சரியாக வாழவில்லை. சிங் டெல்லியில் பள்ளிப்படிப்பை மேற்கொண்டார். அவரது இளம் வயதில், அவர் அமெரிக்காவிற்குச் சென்றார், 12 வயதில் இந்தியாவுக்குத் திரும்பினார். அவர் 1993 இல் மும்பையில் குடியேறினார்.

சிங் டெல்லியில் பாரி ஜான்ஸ் தியேட்டர் ஆக்ஷன் குரூப் (TAG) உடன் இணைந்து 12 வருடங்களாக திரையரங்கில் பணிபுரிந்தார் மற்றும் Zee TVயில் ஒளிபரப்பான பிரபலமான ஹிந்தி டிவி கேம் ஷோ, டோல் மோல் கே போல் இல் இடம்பெற்றுள்ளார். ரிதுராஜ் சிங் இப்போது Zee5 இல் கிடைக்கும் 'அபய்' என்ற வலைத் தொடரின் ஒரு பகுதியாக உள்ளார். 

1993 இல் ஜீ டிவியில் ஒளிபரப்பான பனேகி அப்னி பாத், ஜோதி, ஹிட்லர் திதி, ஷபத், வாரியர் ஹை, ஆஹத் மற்றும் அதாலத், தியா அவுர் பாத்தி ஹம் போன்ற பல இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் தனது வித்தியாசமான பாத்திரங்களில் நடித்துள்ளார். அவர் கலர்ஸ் டிவி சீரியலான லாடோ 2 இல் பல்வந்த் சோத்ரியாக நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X