Freelancer / 2022 ஜூன் 09 , பி.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'எஸ்கே 20' படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' மற்றும் 'டான்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்த இரண்டு படங்களும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் அவரது அடுத்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் தமிழ், தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்திற்கு 'பிரின்ஸ்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் சிவகார்த்திகேயனுக்கு ஏற்ற செமையான டைட்டில் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே 'டாக்டர்' 'டான்' ஆகிய டைட்டில்கள் சிறப்பாக அமைந்ததை அடுத்து மீண்டும் ஒரு சூப்பர் டைட்டில் அவரது படத்திற்கு கிடைத்துள்ளது.
ஏற்கனவே சிவகார்த்திகேயனை அவருடைய ரசிகர்கள் "பிரின்ஸ் சிவகார்த்திகேயன்" என்று அழைத்து வரும் நிலையில், தற்போது அதுவே அவரது படத்திற்கு டைட்டிலாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
28 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago