2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சீதாவுக்கு ராஜமெளலி வரவேற்பு

J.A. George   / 2020 டிசெம்பர் 08 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கு சினிமாவிலிருந்து பாகுபலி, பாகுபலி 2 என இரண்டு பிரமாண்டங்களைக் கொடுத்த ராஜமெளலி இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் படம் ‘ஆர்ஆர்ஆர்’. 

ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடித்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது. படப்பிடிப்பில் அலியா பட் இணைந்துள்ளார். அதையும் படக்குழு உறுதி செய்துள்ளது. 

சமீபத்தில் படத்திலிருந்து இரண்டு டீசர்கள் வெளியாகி பெரிய எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்றுப் பின்னணியில் உருவாகிவருவதால் படத்தின் படப்பிடிப்பு கொஞ்சம் அதிகமாகவே பாக்கியிருக்கிறதாம். 

விரைவிலேயே அதை முடித்துவிடும் திட்டத்துடன் பணியாற்றி வருகிறார்கள் படக்குழுவினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X