Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 11 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவில் திறமைசாலிகள் அதிகம் இருந்த காலம் மாறிவிட்டது. இப்பொழுது என்னதான் திறமைசாலிகள் இருந்தாலும் பாடல்கள், கதைகள், படத்தின் தலைப்புகள் என சிந்திக்க முடியாமல் மற்ற படங்களிலிருந்து காப்பியடித்து திருடப்பட்டு இருந்தது. இது சில வருடங்களாக அதிகரித்து வருகிறது.
அன்றைய காலத்தில் அழகாக சிந்தித்து எழுதிய கதையாக இருந்தாலும் சரி, திரைக்கதையாக இருந்தாலும் சரி, அதற்கான அழகிய தலைப்பு வைத்து பெருமை அடைய செய்தது தமிழ் சினிமா. அவர்கள் எடுத்துக்காட்டுகள் அன்றைய காலத்தில் பழைய திரைப்படங்களின் பெயர்கள் படத்தின் வெற்றியை இன்று வரை தமிழ் சினிமா கொண்டாடி வருகிறது.
இது ஒருபுறமிருக்க இந்த படங்களின் வரலாற்றை திரைப்படங்கள் அழித்து வருகிறது. ஆனால் இன்று அனைத்து குடும்பங்களையும் அழித்து வரும் குடும்ப சீரியல்கள் மெகா தொடர்கள் வீட்டில் அனைவரையும் தன் வசப்படுத்தி உள்ளது.
பல வருடங்களுக்கு முன்பு ஒரு சில தொலைக்காட்சிகள் மட்டுமே அந்த மாதிரியான சீரியல் தொடர்களை எடுத்து வந்தன. ஆனால் இன்று தொலைக்காட்சிகள் என்றாலே சீரியலாக மாறிவிட்டது.
தமிழ் தொலைக்காட்சிகள் ஒருபுறம் தமிழ் சார்ந்த குடும்ப சம்பந்தமான தொடர்களை இயக்கி வந்த நிலையில், மற்ற நேஷனல் சேனல் வரவு தமிழகத்தில் சீரியலை வடமாநில சம்பந்தப்பட்ட சீரியல்களாக மாற்றப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டது.
அந்தச் சீரியலுக்கு தமிழ் படங்களின் பெயர்களையும் அதில் வரும் பாடல்களையும் யாரிடமும் உரிமை கோராமல் பயன்படுத்தி வந்தனர்.
வடமாநில சம்பந்தப்பட்ட சீரியல்களும் தமிழ் சினிமாவில் காப்பியடித்து வெற்றியும் பெற்றன. இதனை தமிழ் தொலைக்காட்சிகளும் பின்பற்றி வருகின்றன. தமிழ் சினிமா மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படங்களின் பெயர்களை சர்வ சாதாரணமாக பயன்படுத்தி அந்த திரைப்படங்களின் மரியாதையை சீர்குலைக்கும். ஆகவே இதற்கு தயாரிப்பாளர் சங்கம் முடிவு எடுக்கப்பட உள்ளது.
தனியார் தொலைக்காட்சிகள் சீரியலில் திரைப்படங்களின் பெயர்களை, பாடல்களை பயன்படுத்துவது தொடர்ந்தால் அந்த தொலைக்காட்சிக்கு திரைப்படங்களின் பாடல்கள், புது படங்களின் டிரைலர்கள், காட்சிகள் எதையும் தர மாட்டோம்.
எங்களிடம் உரிமை கேட்டு நாங்கள் சரி என்று சொன்னால் மட்டுமே அந்த பெயர்களும் பாடல்களும் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட உள்ளது. இது ஆரோக்கியமான விஷயமாக தமிழ் சினிமாவிற்கு அமையும் என்று பாராட்டப் படுகிறது.
46 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
2 hours ago