2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் சிம்பு

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 28 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குநர் சுதா கொங்கரா தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’பராசக்தி’ படத்தை இயக்கி வரும் நிலையில், அவரது அடுத்த படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படம் ’பராசக்தி’ படத்துக்கு முன்பே திட்டமிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ’வேட்டை நாய்’ என்ற தலைப்பில் வெளியான நாவல் தான் திரைப்படமாக உருவாக இருக்கிறது என்றும், இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

சிம்பு ஏற்கெனவே மூன்று படங்களில் நடிக்க கமிட்டாகி இருக்கும் நிலையில், இந்த படம் எப்போது தொடங்கும், எப்போது அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் இல்லை. 
ஆனாலும், சிம்பு - சுதா கொங்கரா இணையும் படம் நிச்சயம் உருவாகும் என திரை உலகில் பேசப்பட்டு வருகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .