R.Tharaniya / 2025 ஏப்ரல் 17 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'மாமன்'. லார்க் ஸ்டுடியோ சார்பில் கே.குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா லஷ்மி நடித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
லப்பர் பந்து புகழ் ஸ்வஷிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் பிரகீத் சிவன் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் அடுத்த மாதம் 16 ஆம் திகதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், நடிகர் சூரியின் அடுத்த படத்திற்கான டைட்டில் லுக் போஸ்டர் நாளை காலை 11.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோ இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும், 'காயத்தை உண்டாக்கிய ஈட்டியால் மட்டுமே குணப்படுத்த முடியும்' என்ற வசனத்துடன் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago