Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
'என்.ஜி.கே', 'காப்பான்' ஆகிய திரைப்படங்களை முடித்துவிட்ட சூர்யா, அடுத்ததாக இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். சூர்யாவின் 38ஆவது திரைப்படமான இதன் பூஜை, ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது.
இந்தத் திரைப்படத்தில், கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு, மலையாளத்தில் 'மகேஷிண்டே பிரதிகாரம்' திரைப்படத்தில், பஹத் பாசில் ஜோடியாக அறிமுகமான இவர், தமிழில் '8 தோட்டாக்கள்', 'சர்வம் தாள மையம்' உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். முதன்முறையாக, தமிழில் ஒரு முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகும் அதிர்ஷ்டம், சூர்யா திரைப்படம் மூலமாக இவரைத் தேடிவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .