2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சேதுபதியின் புதிய முயற்சி

J.A. George   / 2021 ஜனவரி 01 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது நிறுவனம் தயாரிக்க இருக்கும் வெப் திரைப்படம் குறித்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒரு மணி நேரம் மட்டுமே ஓடும் வகையில் தயாரிக்கப்படும் இந்த வெப் திரைப்படத்தின் டைட்டில் ’முகிழ்’என்று அவர் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்

இந்த திரைப்படத்தின் டிரைலர் புத்தாண்டு தினத்தில் அதாவது இன்று(01) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா முக்கிய வேடத்திலும் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிகை ரெஜினாவும் நடிக்க உள்ளார்கள். கார்த்திக் என்பவர் இயக்க உள்ளார்.

பெண் இசையமைப்பாளர் ரீவா இசையில், சத்யா ஒளிப்பதிவில் உருவாகும் இந்தப் திரைப்படம் விரைவில் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X