2025 நவம்பர் 05, புதன்கிழமை

சொந்த ஊருக்கு சென்ற நயன்தாரா-விக்னேஷ் சிவன்

Freelancer   / 2022 ஜூன் 13 , பி.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி திருமணத்திற்கு பின் முதல் முறையாக கேரளாவிற்கு சென்றனர்.

சமீபத்தில் பிரபல நடிகை நயன்தாரா,  இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடந்தது.

திருமணம் முடிந்த கையோடு நட்சத்திர தம்பதி திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயன்தாரா-விக்னேஷ் சிவன், தங்களுக்கு ஆதரவு அளித்த எல்லோருக்கும் நன்றி என்றும்,  இனியும் உங்கள் ஆதரவு தொடர வேண்டும் என்றும் கூறினர்.

இந்த நிலையில் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்த தம்பதி,  கேரளாவின் கொச்சிக்கு விமானம் மூலம் சென்றனர். அங்கு அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து திருவல்லாவுக்கு நயன்தாரா-விக்னேஷ் சிவன் புறப்பட்டு சென்றனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X