2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஜனநாயகன் பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Freelancer   / 2025 மார்ச் 24 , பி.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'. இப்படத்துடன் நடிப்பதை நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

விஜயின் கடைசி படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டுள்ளது. அத்துடன் படத்திற்கு 'ஜனநாயகன்' என தலைப்பிட்டதும், அவரது அரசியல் வருகைக்கு அச்சாரமாக இப்படம் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இதனால் 2026ல் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அதை கணக்கிட்டு படத்தை வெளியிடுவார்கள் என செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இன்று (மார்ச் 24) மாலை 6 மணிக்கு தயாரிப்பு நிறுவனம் பட ரிலீஸ் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 9ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விஜய் நடித்த 'கோயம்பத்தூர் மாப்பிள்ளை, காலமெல்லாம் காத்திருப்பேன், கண்ணுக்குள் நிலவு, ப்ரண்ட்ஸ், திருப்பாச்சி, ஆதி, போக்கிரி, வில்லு, காவலன், நண்பன், ஜில்லா, பைரவா, மாஸ்டர், வாரிசு' ஆகிய 14 படங்களும் பொங்கலுக்கு வெளியாகி இருந்தது. இதில் 12 படங்கள் ஹிட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X