Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
R.Tharaniya / 2025 ஜூன் 16 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் விஜய் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விஜய் நடித்த காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது பூஜா ஹெக்டேயின் காட்சிகளும் முடிவடைந்துவிட்டதாக அவர் அறிவித்துள்ளார்.
விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருவதுடன், இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகள் படத்தில் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய்க்கு படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் பிரியாவிடை கொடுத்தனர்.
இந்த நிலையில், பூஜா ஹெக்டேயும் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்துக்கொண்டு, அது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன், இன்னும் ஒரு சில நாட்களில் ‘ஜனநாயகன்’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் என்றும், அதன்பிறகு தொழில்நுட்ப பணிகள் தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .